பிரக்கோலி பொரியல்

பிரக்கோலி பொரியல்

பிரக்கோலி பொரியல் தென்னிந்திய சமையலில் மிகவும் சத்துள்ள பிரக்கோலியில் செய்யும் பொரியலாகும். இது மிகவும் துரிதமாக செய்யக் கூடியது. தேங்காய் துருவல் சேர்த்து செய்தால் வாசனையுடன் இருக்கும். இந்த காயை விரும்பாதவர்கள் கூட இந்த பொரியலை விரும்புவர். இதை சாதத்துடனும் ரொட்டியுடனும் சேர்த்து சாப்பிடலாம். என் நண்பர் ஒருவருக்கு இந்த வறுவலை அப்படியே சாப்பிட பிடிக்கும்.

பிரக்கோலி பொரியல் செய்முறைமைக்ரோவேவ் செய்முறை

பிரக்கோலி பொரியல்

Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பிரக்கோலி -1 பூ
  • வெங்காயம் -1/2 பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 1
  • துருவிய தேங்காய் - 2 (மேசைக்கரண்டி)
  • கருவேப்பிலை - 1 கொத்து
  • எண்ணெய் - 2 (தேக்கரண்டி)
  • கடுகு - 1/2 (தேக்கரண்டி)
  • வரமிளகாய் -2
  • உளுத்தம் பருப்பு - 2 (தேக்கரண்டி)
  • உப்பு - தேவையான அளவு

Instructions

  • பிரக்கோலியை கழுவி பொடியாக நறுக்கவும். வெஜிடபிள் கட்டரிலும் நறுக்கி கொள்ளலாம்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  • அதனுடன் உளுத்தம் பருப்பு, வர மிளகாய் , கருவேப்பிலை சேர்க்கவும். உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • பிரக்கோலி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • 3-5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். கரும் பச்சை நிறமாக மாறி பாதி அளவு வேகவிடவும்.
  • தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். பிரக்கோலி பாதி அளவு வேக வைத்தால் தான் மொறு மொறுப்பாக இருக்கும். அதனால் முழுமையாக வேகவிடக் கூடாது.

மைக்ரோவேவ் செய்முறை

ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் தாளிக்கும் பொருட்கள், நறுக்கிய பிரக்கோலி,வெங்காயம்,பச்சை மிளகாய்,தேங்காய் துருவல்,தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.இடையில் ஒரு முறை கிளறி விடவும்.

பரிமாற பரிந்துரைப்பது

  • பிரக்கோலி பொரியல் சத்துள்ளதாகும். சாதத்துடனும், கலவை சாதத்துடனும், ரொட்டியுடனும் பரிமாறலாம்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.