Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு
Prep Time
10
minutes
mins
Cook Time
20
minutes
mins
Total Time
30
minutes
mins
Course:
Side Dish
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
தயிர் – 1.5 கிண்ணம்
தண்ணீர் - 1.5 கிண்ணம்
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
இஞ்சி – 1/2 அங்குல துண்டு
மாங்காய் இஞ்சி – 1/2 அங்குல துண்டு
பச்சை மஞ்சள் – 1/2 அங்குல துண்டு
பச்சை மிளகாய் - 2
அல்லது காரத்திற்கு ஏற்ப
சீரகம் -1/2 தேக்கரண்டி
உப்பு - ருசிகேற்ப
கொத்தமல்லி தழை – ஒரு கையளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 கொத்து
வர மிளகாய் - 2
Instructions
இஞ்சி, மாங்காய் இஞ்சி, பச்சை மஞ்சள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் துருவிய தேங்காய் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போடவும்.
தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துகொள்ளவும்.
அரைத்த மசாலாவுடன் தயிர் சேர்த்து மிக்சியை ஒரு முறை சுற்றி எடுக்கவும்.
உப்பு சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும். இதுவே மோர் குழம்பு கலவையாகும். இனி தாளித்தல் மட்டுமே.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். வெடிக்க ஆரம்பித்தவுடன் பெருங்காயம் சேர்த்து வர மிளகாயை கிள்ளி போட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து மோர் கலவையை சேர்க்கவும். கைவிடாமல் கிளறிவிடவும். 3-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்துவிடவும். சுவையான மோர்குழம்பு தயார்.