பாகற்காயை கழுவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி பாகற்காயை மொறுமொறுப்பாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் கொத்தமல்லி விதை (தனியா), கடலைபருப்பு, வர மிளகாய், மிளகு, துருவிய தேங்காய் அனைத்தையும் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
துவரம் பருப்பை குழைவாக வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் பாகற்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும்.
அரைத்த மசாலா, வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து இதனுடன் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
பாவக்காய் பிட்லை தயார். மோர் குழம்பு, வெள்ளை சாதம், மற்றும் பப்படத்துடன் பரிமாறலாம்.