கார அம்மிணி கொழுக்கட்டை
கொழுக்கட்டைகளில் பல வகைகள் உள்ளன. அதில் மிக எளிதாக செய்யக்கூடியது அம்மிணி கொழுக்கட்டையாகும். மாலை நேரத்தில் டிபனுக்கு செய்துகொடுக்க ஏற்றது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் கேட்டவுடன் செய்யக்கூடிய எளிய முறையில் இதன் செய்முறையை கொடுத்துள்ளேன். வயதானவர்களுக்கும் எளிதில் ஜீரணமாகும். பதப்ப்டுத்திய அரிசி மாவு இருந்தால் உடனடியாக தயாரிக்கலாம். அரிசியை ஊற வைத்து அரைத்தும் தயாரிக்கலாம்.
கார அம்மிணி கொழுக்கட்டை செய்முறை
கார அம்மிணி கொழுக்கட்டை
Ingredients
- அரிசி மாவு - 1 கிண்ணம்
- தண்ணீர் - 1.5 கிண்ணம்
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - 1/2 தேக்கரண்டி (தேவைகேற்ப)
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- இட்லி மிளகாய் பொடி - 1.5 தேக்கரண்டி அல்லது வரமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை - சிறிது
- வரமிளகாய் - 1 (உடைத்தது)
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
Instructions
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கலக்கவும்.
- இதை ஒரு வாணலில் சேர்த்து அடுப்பை குறைத்து, தொடர்ந்து கிளறவும். மெதுவான அரிசி உருண்டை பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
- இறக்கி நன்றாக ஆறவிட்டு பின்னர் கையில் பிசையவும். சில துளிகள் எண்ணெய் விட்டு பிசையவும்.
- கோலி குண்டு அளவிற்கு உருண்டைகளாக செய்யவும். உள்ளங்கையில் ஒவ்வொன்றையும் நன்றாக உருட்டவும்.
- இந்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் 5-7 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.
- வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
- வேக வைத்த அரிசி உருண்டைகளை வாணலில் சேர்க்கவும். இட்லி பொடியை சேர்க்கவும். காரம் அதிகம் வேண்டுமானால் வரமிளகாய் தூள் சேர்க்கலாம்.
- சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
கார அம்மிணி கொழுகட்டையின் விரிவான செய்முறை
சிலர் தண்ணீரை முதலில் கொதிக்கவிட்டு அதில் அரிசி மாவு கலப்பார்கள். நான் முதலில் அரிசி மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து குளிர்ந்த தண்ணீரில் எந்த கட்டியும் இல்லாத வண்ணம் கலக்கி வைப்பேன்.
பிறகு இதை ஒரு வாணலில் சேர்த்து அடுப்பை குறைத்து, தொடர்ந்து கிளறவும். மெதுவான அரிசி உருண்டை பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
இறக்கி நன்றாக ஆறவிட்டு பின்னர் கையில் பிசையவும். சில துளிகள் எண்ணெய் விட்டு பிசையவும். கோலி குண்டு அளவிற்கு உருண்டைகளாக செய்யவும். உள்ளங்கையில் ஒவ்வொன்றையும் நன்றாக உருட்டவும். இந்த உருண்டைகளை இட்லி தட்டில் வைக்கவும்.
5-7 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.
வாணலில், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
கடுகு வெடித்த பின் வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
வேக வைத்த அரிசி உருண்டைகளை வாணலில் சேர்க்கவும்.
இட்லி பொடியை சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
குறிப்பு
- அரிசி வகைக்கேற்ப தண்ணீர் உறிஞ்சி விடும். அதனால் அரிசிக்கேற்ப தண்ணீர் அளவை மாற்றிக் கொள்ளலாம்.