Go Back
Print
Recipe Image
Notes
Smaller
Normal
Larger
Print Recipe
தயிர் இட்லி
Prep Time
15
minutes
mins
Cook Time
10
minutes
mins
Total Time
25
minutes
mins
Course:
Appetizer
Cuisine:
Indian
Servings:
4
people
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
மினி இட்லிகள் - 25
அல்லது 6 இட்லிகள் - ஒவ்வொன்றையும் நான்காக வெட்டவும்
தயிர் - 4 - 5 கிண்ணம்
பால்
(அல்லது தண்ணீர்) - 1 கிண்ணம்
கொத்தமல்லி - அழகுக்காக
கேரட்
துருவல் - அழகுக்காக
சக்கரை - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டியவை :
முந்திரி - 1 மேசைக்கரண்டி
தேங்காய்
(துருவியது) - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தாளிக்க தேவையானவை :
கடுகு - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - 5 - 6 இலைகள்
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3-4
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
Instructions
இட்லிகளையை ஆவியில் வேக வைத்து நான்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
தயிரை கடைந்து, அதில் தேவையான அளவு உப்பு, சக்கரை சேர்க்கவும்.
வாணல் சூடான பின், கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.
தாளித்தவற்றை தயிரில் கலந்து ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மூன்றையும் நன்றாக அரைத்து தயிரில் கலக்கவும்.
இறுதியாக பரிமாறும் அரை மணி நேரத்திற்கு முன் இட்லி துண்டுகளை தயிரில் கலக்கவும்.(இல்லையெனில் குழைந்து போகும்).
கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
கோடை காலத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
Notes
இட்லி துண்டுகளை எண்ணெயில் பொரித்தும் தயிரில் கலக்கலாம். அப்பொது குழைந்து போகாது. ஆனால் நிறம் மாறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.