வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டு சூப் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு சத்துள்ள காயாகும். இதை பொரியலாகவும் செய்யலாம். ஆனால் அதைவிட சூப்பில், தண்டில் உள்ள சத்து அனைத்தும் வீணாகாமல் முழுமையாக கிடைக்கும். சிறுநீரகக்கல் உள்ளவர்கள் தண்டை வேகவைக்காமல் அரைத்து சாறை குடித்தால் முழுபலன் கிடைக்கும். வாழைத்தண்டை அடிக்கடி உண்வில் சேர்த்துகொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பொடியாக நறுக்கி தயிர் சேர்த்து தயிர் பச்சடியாகவும் செய்யலாம். ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துகொள்வது நல்லது.
வாழைத்தண்டு சுத்தம் செய்து நறுக்கும் முறையெ இங்கு காணலாம்.
வாழைத்தண்டு சூப் செய்முறை
வாழைத்தண்டு சூப்
Servings: 4 people
Ingredients
- வாழைதண்டு – 5 அங்குலம் நீளமுள்ளது
- சோள விதைகள் – 125 கிராம்
- தண்ணீர் – 1 கிண்ணம்
- தண்ணீர் – 125 மில்லி
- கருப்பு மிளகு தூள் – ருசிக்கேற்ப
- கருப்பு உப்பு - ருசிக்கேற்ப
- உப்பு - ருசிக்கேற்ப
- எலுமிச்சை சாறு - சிறிதளவு
அலங்கரிக்க
- புதினா இலைகள் - சிறிதளவு
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
- துருவிய கேரட் – 2 தேக்கரண்டி
- துருவிய சீஸ் – 2 தேக்கரண்டி
- வேகவைத்த பீன்ஸ் – 2 தேக்கரண்டி
Instructions
- வாழைத்தண்டை வட்டமாக நறுக்கவும். நறுக்கும்போது அதில் உள்ள நார்களை நீக்கிவிடவும்.
- நறுக்கிய பின்னர், சோள விதைகள் சேர்த்து ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4-5 விசில் விடவும்.
- ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துகொள்ளவும். மேலும் 250 மில்லி தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
- ஒரு வாணலியில் வடித்ததை ஊற்றி 5-7 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- வேறு கிண்ணத்திற்கு மாற்றி அலங்கரிக்க கொடுத்துள்ளவற்றை கொண்டு அலங்கரிக்கவும்.
- சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்களுக்கு விருப்பமானால் வெண்ணெய் சிறிதளவு சேர்க்கலாம்.