சிக்கன் சுக்கா
சிக்கன் சுக்கா என்பது சிக்கனை தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயீல் மொறு மொறுப்பாக வறுப்பது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செய்வர். மங்களூரியன் சிக்கன் சுக்கா என்பதை கோரி சுக்கா என்பர். இது மிகவும் பிரசித்தமானது. வெங்காயம், தக்காளி, இஞ்சி, மற்றும் பூண்டு சேர்த்து செய்வதாகும். இதை அரைத்த மசாலா பவுடர் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் செய்வதாகும். இறுதியில் அந்த மசாலா சிக்கன் துண்டுகள் மீது முழுவதுமாக கலந்து மிகுந்த சுவையுடன் இருக்கும். இது மிகவும் சுலபமாக தயாரிக்க கூடியது. நான் அடிக்கடி தயாரிக்கும் உணவீல் இதுவும் ஒன்றாகும். வெறும் 15 நிமிடத்தில் தயாரித்துவிடலாம். சாதத்துடன் ரசம், சாம்பார், மோர் சேர்த்து சாப்பிடும் போது சிக்கன் சுக்காவுன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். வேலை அதிகமுள்ள நாட்களிலும் மிக சுலபமாக தயாரிக்கலாம். திருமணமாகாத இளைஞர்கள் கூட மசாலா எதுவும் அரைக்காமல் மிக சுலபமாக சமைக்கலாம். சிக்கன் சுக்காவை செய்து பாருங்கள் நிச்சயம் இந்த சுவையை நீங்கள் விரும்புவீர்கள்.
சிக்கன் சுக்கா செய்முறை
சிக்கன் சுக்கா
Ingredients
- சிக்கன் – 1/2 கிலோ
- வெங்காயம் - 1 நறுக்கியது
- சிவப்பு மிளகாய் பொடி- 1 தேக்கரண்டி
- கருப்பு மிளகு பொடி - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி பொடி - 2 தேக்கரண்டி
- பெருஞ்சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி - ¼ தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் -¼ தேக்கரண்டி
- தயிர் - 2 மேசைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி இலைகள்- அலங்கரிக்க
- பச்சை மிளகாய் - 2 அல்லது 3 நறுக்கியது
Instructions
- சிக்கனை கழுவி துண்டுகளாக வெட்டவும்.
- ஒரு கிண்ணத்தில் சிவப்பு மிளகாய் பொடி, கருப்பு மிளகு பொடி, பெருஞ்சீரக பொடி, கொத்தமல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, தயிரை கலக்கவும். சிக்கன் துண்டுகளைச் மசாலாவுடன் கலக்கவும். சிக்கன் கலவையை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
- கடாயில் எண்ணெயை சூடாக்கி கலந்து வைத்த சிக்கனை சேர்த்து மூடிவைத்து நன்றாக வேகவிடவும். பிராய்லர் கோழி விரைவில் வெந்துவிடும், நாட்டு கோழி வேக நேரம் அதிகமாகும்.
- மூடியை திறந்து 4-6 நிமிடங்கள் தண்ணீர் முழுவதும் குறையும்வரை வதக்கவும். மசாலா முழுவதுமாக சிக்கன் துண்டுகள் மேல் ஒட்டிக்கொள்ளும்
- நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறி அடுப்பை அணைக்கவும்.
- கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்.
சிக்கன் சுக்காவை பரிமாறும் முறை
- சுக்காவை பிரியாணி, தயிர் சாதம், தக்காளி சாதம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாரலாம்
- எலுமிச்சை சாறை சிக்கன் சுக்காமீது ஊற்றினால் சுவை அதிகமாகும். பரிமாறும் முன்னர் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.