சிக்கன் லாலிபாப்
குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பும் சிக்கன் லாலிபாப்பை வீட்டிலேயே இனி செய்யலாம். பார்த்த மாத்திரத்தில் நம் நாவிற்கு விருந்து தரும் இந்த ருசியான வறுவல் சிக்கனின் தோல் உரித்த இறக்கைகள் கொண்டு செய்ய வேண்டும். சிக்கன் லாலிபாப் ஸெஸ்வான் சாஸுடன் வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
சிக்கன் லாலிபாப்
Servings: 6
Ingredients
- சிக்கன் லாலிபாப் (தோல் உரித்த இறக்கைகள்) - 500 கிராம்
ஊற வைக்க தேவையான பொருட்கள்:
- சோள மாவு - 2 மேசைக்கரண்டி
- சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
- வினிகர் - 1 தேக்கரண்டி
- வரமிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
- இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
- பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- அஜினோமொட்டொ - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
மாவிற்கு தேவையான பொருட்கள்:
- மைதா - 6 மேசைக்கரண்டி
- சோள மாவு - 6 மேசைக்கரண்டி
- தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
- இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி
- பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
- வினிகர் - 1 மேசைக்கரண்டி
- வரமிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
- முட்டை - 1
- அஜினோமொட்டொ - 1/8 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- கேசரி கலர் பொடி - 1/8 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவைக்கேற்ப
Instructions
- முதலில் சிக்கன் துண்டுகளில் உள்ள நீரை ஒரு துணியில் ஒத்தி எடுக்கவும்.
- பின் மேலே குறிப்பிட்டுள்ள 'ஊற வைக்கும் பொருட்களுடன்' சிக்கன் துண்டுகளை 2 மணி நேரம் ஊறவிடவும்.
- பின் கீழே குறிப்பிட்டுள்ள 'மாவில் கலக்க வேண்டிய பொருட்களுடன்' ஊற வைத்தவற்றை சேர்த்து கெட்டியாக கலந்து வைக்கவும்.
- வாணலில் எண்ணெய் நன்றாக சூடான பின் சிக்கன் லாலிபாப்பை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- ஸெஸ்வான் ஸாசுடன் உணவிற்கு முன் துவக்கத்தில் பரிமாறவும்.
குறிப்பு
- வாணலில் சிக்கன் லாலிபாப்பை தலைகீழாக வைத்து பொரித்தால் அழகான உருண்டையான வடிவத்தில் வரும்.