ஒரு கிண்ணத்தில் சிவப்பு மிளகாய் பொடி, கருப்பு மிளகு பொடி, பெருஞ்சீரக பொடி, கொத்தமல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, தயிரை கலக்கவும். சிக்கன் துண்டுகளைச் மசாலாவுடன் கலக்கவும். சிக்கன் கலவையை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி கலந்து வைத்த சிக்கனை சேர்த்து மூடிவைத்து நன்றாக வேகவிடவும். பிராய்லர் கோழி விரைவில் வெந்துவிடும், நாட்டு கோழி வேக நேரம் அதிகமாகும்.
மூடியை திறந்து 4-6 நிமிடங்கள் தண்ணீர் முழுவதும் குறையும்வரை வதக்கவும். மசாலா முழுவதுமாக சிக்கன் துண்டுகள் மேல் ஒட்டிக்கொள்ளும்
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறி அடுப்பை அணைக்கவும்.