Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
வெண்டைக்காய் சாதம்
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
தக்காளி - 2
வெண்டைக்காய் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
(நடுத்தர அளவில் உள்ளது)
பாஸ்மதி அரிசி – 2 கிண்ணம்
இஞ்சி-பூண்டி விழுது – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
Instructions
அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து 3.5 கிண்ணம் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும்.
வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயில் உப்பும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை வதக்கவும்.
வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். அரிசியின் மீது மசாலா முழுவதும் சேரும் வரை நன்றாக கலந்து விடவும்.
இறுதியில் வறுத்த வெண்டைக்காயை சேர்த்து கிளறவும். வெண்டைக்காய் சாதத்தில் பரவலாக ஆகும் வரை கிளறி விடவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.