பெரு நெல்லிக்காய் ஊறுகாய்

பெரு நெல்லிக்காய் ஊறுகாய்

பெரு நெல்லிக்காய்(ஆம்லா) ஒரு பழமை வாய்ந்த பழ வகையாகும். இதில் பல்வேறு வகையான சத்துகள் அடங்கி உள்ளது. இது இரத்த கொதிப்பு, நீரிழிவு கட்டுபடுத்த வல்லது. பெருநெல்லிக்காயை பச்சையாக சாப்பிடலாம், அல்லது ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம். பச்சையாக சாப்பிட்டால் அதன் தோல் கடினமாக இருக்கும். நாவில் சுவைக்கும் போது, முதலில் கசப்பு, பின் புளிப்பு சுவை தரும். சாப்பிட்ட பின் இனிப்பு சுவை கிடைக்கும். இதை சாப்பிட்ட பின் குழந்தைகள் தண்ணீர் அருந்தி அதன் இனிப்பு சுவையில் மனம் மகிழ்வர்.

நீங்களும் பெரு நெல்லிக்காய் ஊறுகாய் செய்து பாருங்களேன். இங்குள்ள ஊறுகாய் சமையல் குறிப்பு மிக பழமையானது, ஆனால் சுவையானது, எளிதானது.

பெரு நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை

பெரு நெல்லிக்காய் ஊறுகாய்

Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பெருநெல்லிக்காய் - ½ கிலோ
  • நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
  • உப்பு - 4-5 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 5 மேசைக்கரண்டி
  • பெருங்காயம் - 1 தேக்கரண்டி
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கொத்து

Instructions

  • பெருநெல்லிக்காய்களை நன்றாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து எடுக்கவும்.
  • பெருநெல்லிக்காய்களை ஒரு பாட்டிலில் அல்லது களிமண் ஜாடியில் சேர்த்து, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குலுக்கவும். ஒரு வெள்ளை துணியை அந்த ஜாடியின் மேல் வைத்து கட்டவும். ஒரு நாளுக்கு ஒரு முறையோ, இரு முறையோ ஜாடியை லேசாக குலுக்கவும். பெருநெல்லிக்காய்கள் உப்பினை உறுஞ்சி மென்மையாகிவிடும்.
  • உடனடி பெருநெல்லிக்காய் ஊறுகாய் வேண்டுமானால் மேலே குறிப்பிட்டுள்ள 2 ம் படியை தவிர்க்கவும். அதற்கு பதிலாக பெருநெல்லிக்காய்களை ½ கிண்ணம் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நெல்லிக்காய்கள் மென்மையாகும் வரை வேகவிடவும்.
  • வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • அடுப்பை அனைத்த பின் பெருங்காயம், மிளகாய் தூள் சேர்க்கவும் (மிளகாய் தூள் நிறம் மாறாமல் இருக்கும்).
  • இதை பெருநெல்லிக்காயுடன் கலக்கவும். 2-3 நாட்கள் ஊறவிட்டால் பெருநெல்லிக்காயுள் எல்லா சுவையும் இறங்கி சுவை கூடுதலாகும்.

பரிமாற பரிந்துரைப்பது

  • மூன்று நாட்களுக்கு பின்னர், பெருநெல்லிக்காய் ஊறுகாயை தயிர் சாதத்துடன் அல்லது வேறு பதார்த்தத்துடன் பரிமாறலாம்.
  • பாட்டிலில் வைத்து 4 முதல் 5 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.

பெருநெல்லிக்காய் ஊறுகாய் பதப்படுத்தும் முறை

இப்போது அனைவர் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி இருப்பதால், பெருநெல்லிக்காய் ஊறுகாய் பதப்படுத்துவது சுலபமான காரியம். நம்மில் பெரும்பாலோர் சத்தான உணவு முறைக்கு மாறி வரும் இக்காலக்கட்டத்தில் கடை ஊறுகாயை விட உப்பு, எண்ணெய் குறைவாக நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே பதப்படுத்த விரும்பினால்

  1. துவக்கத்தில் பெருநெல்லிக்காயில் ஈரம் இல்லாது பார்த்து கொள்ளவும்.
  2. உப்பு, எண்ணெய் அளவை இரண்டு மடங்காக்கவும். எண்ணெய் ஊறுகாய் மூழ்கும் அளவில் இருக்க வேண்டும்.
  3. 2 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி வெந்தயம் வெறும் வாணலில் வறுத்து பொடியாக்கி ஊறுகாயில் கலக்கவும்.
  4. கடைசியாக 2 தேக்கரண்டி வினிகர் சேர்க்கவும். ஊறுகாயை பதப்படுத்த இது உதவும்.

வேறுபாடுகளாக பரிந்துரைப்பது

  • பெருநெல்லிக்காயை துண்டுகளாக்கி ஊறுகாயை செய்யலாம்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.