வெள்ளரிக்காய் பச்சடி (ரய்த்தா)
வெள்ளரிக்காய் பச்சடி ஒரு குளிர்ந்த புத்துணர்ச்சி ஊட்டும் உணவு. இதை பரோட்டா, பிரியாணி அல்லது ஒரு சாலட் என அனுபவித்து உண்ணலாம்.
வெள்ளரிக்காய் பச்சடி செய்முறை
வெள்ளரிக்காய் பச்சடி(ரய்த்தா)
Ingredients
- தயிர்- 1 கிண்ணம் (கடையில் வாங்கியது/ வீட்டில் செய்தது)
- வெள்ளரிக்காய் - 1 பெரியது (அல்லது 2 சிறியது)
- உப்பு - ½ தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை - 1-2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
சுவையூட்ட தேவையானவை
- கருப்பு உப்பு - தேவைக்கேற்ப
- வறுத்த சீரகத்தூள் - 1 சிட்டிகை
- வரமிளகாய் தூள் - 1 சிட்டிகை
- சக்கரை - 1 சிட்டிகை
Instructions
- வெள்ளரிக்காயை கழுவி அதன் தோல் நீக்கவும். பின்னர் பொடியாக நறுக்கவும்/துருவவும்.
- தயிரை லேசாக கடைந்து வைக்கவும்.
- தயிரில் வெள்ளரிகாய், உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- சுவையூட்ட தேவையானவற்றை தேவைக்கேற்ப சேர்க்கவும்.
- நன்றாக கலந்து பரிமாறவும்.
வேறுபாடுகளாக பரிந்துரைப்பது
- சுவையூட்ட தேவையானவற்றில் நீங்கள் விரும்பும் பொருள் சேர்த்தால் போதுமானது. நான் பெரும்பாலும் பரோட்டாவிற்கு அவை அனைத்து சேர்ப்பது வழக்கம். ஆனால் பிரியாணி செய்யும் போது வெறும் உப்பு மட்டுமே சேர்ப்பேன்.
- தென்னிந்தியாவில் பச்சடியை கடுகு, வரமிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை கொண்டு தாளிக்க விரும்புவார்கள். இதை வெள்ளரி பச்சடி என்பார்கள். இதை சாதத்துடன், குழம்பு வகைகளுடன் பரிமாறலாம்.