பெருநெல்லிக்காய்களை நன்றாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து எடுக்கவும்.
பெருநெல்லிக்காய்களை ஒரு பாட்டிலில் அல்லது களிமண் ஜாடியில் சேர்த்து, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குலுக்கவும். ஒரு வெள்ளை துணியை அந்த ஜாடியின் மேல் வைத்து கட்டவும். ஒரு நாளுக்கு ஒரு முறையோ, இரு முறையோ ஜாடியை லேசாக குலுக்கவும். பெருநெல்லிக்காய்கள் உப்பினை உறுஞ்சி மென்மையாகிவிடும்.
உடனடி பெருநெல்லிக்காய் ஊறுகாய் வேண்டுமானால் மேலே குறிப்பிட்டுள்ள 2 ம் படியை தவிர்க்கவும். அதற்கு பதிலாக பெருநெல்லிக்காய்களை ½ கிண்ணம் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நெல்லிக்காய்கள் மென்மையாகும் வரை வேகவிடவும்.