கத்திரிக்காய் சட்னி
கத்திரிக்காய் சட்னி மிகவும் சுவையானது மற்றும் கத்திரிக்காயை உங்கள் உணவில் சேர்த்துகொள்ள ஒரு வழியும் ஆகும். கத்திரிக்காய் சிலருக்கு விருப்பமானது, சிலருக்கு பிடிக்காத ஒன்றாகும். கத்திரிக்காய் பிடித்தவர்களுக்கு அதன் தனி சுவையை விரும்புவார்கள். விரும்பாதவர்களுக்கு அதை வேறுவிதமாக சமைப்பதால் உண்ண வைக்கலாம். அதனுடன் மற்ற பொருட்கள் சேர்ப்பதால் கத்திரிக்காயின் சுவை தெரியாது. இதை வடித்த சாதம், தோசை, இட்லியுடன் உண்ணலாம். அதனால் நிச்சயம் செய்து பாருங்கள்.
நான் தக்காளியை சட்னியின் கலர் சிவப்பாவதற்கு சேர்ப்பேன். தக்காளி சேர்க்காவிட்டால் பார்க்க நன்றாக இருக்காது. சுவையும் நன்றாக இருக்கும். அதை உங்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறேன்.
கத்திரிக்காய் சட்னி
Ingredients
- கத்திரிக்காய் – 1 (பெரியது)
- தக்காளி - 1
- புளி – சிறிய அளவு
- பெருங்காயம் – 1/ 4 தேக்கரண்டி
- வர மிளகாய் - 4
- எண்ணெய் – மேசைக்கரண்டி
- கடுகு – 1/ 4 தேக்கரண்டி + 1/ 4 தேக்கரண்டி தாளிக்க
- சீரகம் – 1/ 4 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1/ 4 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 5
- உப்பு – சுவைக்கேற்ப
- கொத்தமல்லி தழை – ஒரு கையளவு
Instructions
- கத்திரிக்காயை சுற்றிலும் எண்ணெய் தடவவும்.
- அடுப்பில் வைத்து சுடவும். கத்திரிக்காயின் தோல் முழுவதும் கலர் மாறும் வரை திருப்பி விடவும்.
- மைக்ரோவேவ் அவனில் சுடலாம். கத்திரிக்காயை திருப்பிவிட்டு எல்லா பக்கமும் நன்றாகவேகவிடவும். குறைந்தது 10-15 நிமிடங்கள் வரை ஆகும். பின்னர் ஆற விடவும்.
- நன்றாக ஆறிய பின்னர் தோலை உரித்து கத்திரிக்காயை மசிக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு தாளிக்கவும்.
- வர மிளகாய், புளி, பெருங்காயம், தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- வதக்கியதை மிக்ஸியில் அரைக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். துருவிய தேங்காய் 2 மேசைக்கரண்டி சேர்க்கவும்.
- (விருப்பபட்டால் ) சிறிதளவு எண்ணெய் சூடாக்கி கடுகு தாளித்து கருவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியில் சேர்க்கலாம். கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- சுட்ட கத்திரிக்காய் சட்னி சாதம், தோசை, இட்லி, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.