பூசணிக்காய் சூப்
காய்கறிகளில் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் நமக்கு கிடைக்கின்றது. சிலருக்கு சில காய்களை உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களின் சத்துக்கள் நமக்கு கிடைக்க எளிய வழி சூப் செய்து உண்பதன் மூலம் பெறலாம். பூசணிக்காய் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்டாலும் ஒரு மாற்றாக இதை முயற்சிக்கலாம். இதே செய்முறையை பயன்படுத்தி மற்ற காய்களையும் சூப் செய்யலாம். பொதுவாக சூப் வகைகள் பசியை தூண்டுவதற்கு விருந்திற்கு முன்பு கொடுக்கப்படும். ஆனால் குழந்தைகளுக்கும், வயதானவர்கள், மட்டுமில்லாமல் அனைவரும் சூப் உண்பதால் உடல் சோர்வு அதிக அளவில் கட்டுபடுத்தப்படுகிறது. பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், கீரை, மஷ்ரூம், தக்காளி என்று எல்லா வகை காய்களிலும் சூப் செய்யலாம். நீங்கள் பூசணிக்காய் சூப் செய்து சுவைத்து பாருங்கள்.
பூசணிக்காய் சூப் தயாரிக்கும் முறை
பூசணிக்காய் சூப்
Ingredients
- சிகப்பு பூசணி நறுக்கியது - 1/4 கிலோ
- வெங்காயம் - 1 (நறுக்கியது)
- கிராம்பு
- சிறிய அளவு துண்டு இஞ்சி
- தேங்காய் பால் - 1 கிண்ணம் (புதிதாக தேங்காய் பால் எடுத்துள்ளேன்)
- தண்ணீர் - 1 கிண்ணம்
- வெண்ணெய் - 2 தேக்கரண்டி
- உப்பு, கருப்பு உப்பு, வறுத்து பொடித்த சீரகப்பொடி - சுவை
Instructions
- பூசணிக்காயை கழுவி தோல்சீவி துண்டுகளாக நறுக்கவும்.
- வெங்காயத்தை உரித்து வெட்டிகொள்ளவும்.
- ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து கிராம்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- வெங்காயம் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பூசணிக்காயை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக வத்க்கவும்.
- ஆற வைத்து 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- வாணலியில் அரைத்த விழுதை ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
- உப்பு, வறுத்துபொடித்த சீரகத்தூள் , தேங்காய் பால் சேர்க்கவும்.
- நன்றாக கலந்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். தேங்காய் பால் சேர்த்த பின்னர் கொதிக்கவிடக்கூடாது.
குறிப்பு
கெட்டியாக இல்லாமல் நீர்க்க (தண்ணீர் போல்) இருக்கவேண்டும்.
பரிமாற பரிந்துரைப்பது
- நறுக்கிய புதினா இலைகளுடன் பரிமாறவும்.