Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
பூசணிக்காய் பரோட்டா
Prep Time
15
minutes
mins
Cook Time
30
minutes
mins
Total Time
45
minutes
mins
Course:
Main Course
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
பூசணிக்காய் விழுது
(அரைத்தது) - 1 கிண்ணம்
கோதுமை மாவு – 1.5 கிண்ணம்
வர மிளகாய் தூள்- 1/ 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1/ 4 தேக்கரண்டி
ஓமம் – 1/ 4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/ 4 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – 1/ 4 கிண்ணம்
(பொடியாக நறுக்கியது)
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கிண்ணம்
எண்ணெய் அல்லது நெய் – பரோட்டா பொரிக்க தேவையான அளவு
Instructions
பூசணிக்காயின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். நான் இந்தியாவில் கிடைக்கும் மஞ்சள் பூசணி (பரங்கிக்காய்) எடுத்துள்ளேன்.
ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துகொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த பூசணி விழுது, உப்பு, வர மிளகாய் தூள், சீரகத்தூள், ஓமம், கரம் மசாலா தூள் அனைத்தையும் போடவும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து கெட்டியான மாவாக பிசைந்துகொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துகொள்ளவும்.
பிசைந்த மாவை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும். கல்லில் ஒட்டாமல் வர உலர்ந்த மாவை சேர்த்து தேய்க்கவும்.
தோசைகல்லை சூடாக்கி தேய்த்த பரோட்டாவை மெதுவாக கல்லில் வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
சில நிமிடங்களில் ஒவ்வொரு இடத்தில் உப்பி வரும், அப்பொழுது மறுபக்கம் திருப்பி விடவும். பிரவுன் நிற புள்ளிகள் வரும்வரை வேகவிடவும்.
எண்ணெய் அல்லது நெய் பரோட்டாவின் மேலே தடவவும். திருப்பிவிட்டு மறுபக்கமும் அதேபோல நெய் தடவவும்.
பரோட்டாவை எடுத்து பரிமாறும் வரை ஹாட் பாக்ஸில் வைக்கவும்.