கம்பு தோசை

கம்பு தோசை

நான் ஏற்கனவே உங்களுடன் கம்பு சோறு, கம்பங்கூழ், மற்றும் பஜ்ரா பக்ரி தயாரிக்கும் முறைகளை பகிர்ந்துள்ளேன். இவை அனைத்தும் நமது முன்னோர்களால் பாரம்பரியமாக தயாரிக்கபட்ட உணவு வகைகளாகும். இந்த தலைமுறையினர் அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து இவற்றை தெரிந்து வைத்துகொள்வதில்லை. ஒவ்வொருவரும் புதிதாக ஏதேனும் ஒன்றை செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

தென்னிந்தியர்களுக்கு தோசை என்பது மனதிற்கு மிகவும் பிடித்த உணவில் ஒன்றாகும். நான் தோசையை அதிக சத்துள்ள விதங்களில் தயாரிப்பதை பகிர்ந்துள்ளேன். இதுவும் அதைபோன்று சத்துள்ள ஆனால் சுவையில் மாறுபட்ட ஒரு வகையாக இருக்கும்.

கம்பு தோசை தயாரிப்பு முறை

கம்பு தோசை

Course: Breakfast
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • கம்பு – 1 கிண்ணம்
  • அரிசி (புழுங்கலரிசி அல்லது இட்லி அரிசி) – 1/ 4 கிண்ணம்
  • உளுத்தம் பருப்பு – 1/ 4 கிண்ணம்
  • வெந்தயம் – 1/ 2 தேக்கரண்டி
  • உப்பு – 1 தேக்கரண்டி

Instructions

  • கம்பை கழுவி கம்பு, அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • தண்ணீர், உப்பு சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.
  • வெதுவெதுப்பான இடத்தில் அரைத்த மாவை 6 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் தடவவும்.
  • ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவில் ஊற்றி கரண்டியின் அடிபாகத்தால் நன்றாக மெல்லிய தோசை போல தேய்த்துவிடவும்.
  • தோசை சுற்றிலும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
  • ஓரங்கள் வெந்தபின்னர் திருப்பி போட்டு அடுத்த பக்கமும் வேகவிடவும். மெல்லியதாக ஊற்றினால் மொறுமொறுப்பாக இருக்கும். கம்பு தோசை தயார்.

பரிமாற பரிந்துரைப்பது

  • சூடான கம்பு தோசையை சட்னி, இட்லி பொடி, சாம்பார் அல்லது ஏதேனும் ஒரு குழம்புடன் பரிமாறலாம்.
கம்பு தோசை

கம்பு மாவில் கம்பு தோசை மாவு தயாரிக்கும் முறை

கடையில் கம்பு மாவு வாங்கினால் உளுத்தம் பருப்பு மட்டும் ஊறவைக்கவும். அரைத்த உளுந்துடன், கம்பு மாவு, அரிசி மாவு, உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். தோசை ஊற்றும் முன்னர் கலந்து புளிக்க வைத்து பின்னர் தோசை ஊற்றவும்.

வேறுபாடாக பரிந்துரைப்பது

  • இதே முறையில் மற்ற சிறு தானியங்களான ராகி மற்றும் தினையில் தோசை தயாரிக்கலாம்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.