கம்பு சாதம் (கம்பு சோறு)
கம்பு எனப்படுவது ஓரு சிறுதானியம் ஆகும். இது அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் சில காலம் அரிசி பயன்பாட்டுக்கு வந்தபின்னர் தானிய வகைகளும், கோதுமையும் குறைந்தது. தற்போது மீண்டும் அதிக அளவில் உபயோகிக்க துவங்கி உள்ளனர். நீரழிவு நோய், அதிக கொழுப்பு சத்து உள்ளவர்கள் உணவில் அதிக அளவில் சிறு தானியங்களை சேர்த்துகொள்கிறார்கள்.
நான் இன்று உங்களுடன் மிக பழமையான கம்பு சாதம் அல்லது கம்பு சோறு தயாரிக்கும் முறையை பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.
கம்பு சோறு தயாரிப்புமுறை
கம்பு சாதம்
Ingredients
- கம்பு – 1 கிண்ணம்
- தண்ணீர் – 2 1/2 கிண்ணம்
- உப்பு – தேவைக்கேற்ப
Instructions
- கம்பை நன்றாக கழுவி கொள்ளவும்.
- 1 கிண்ணம் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் 4 அல்லது 5 முறை சுற்றி எடுக்கவும். உடைத்த ரவைபோல ஆகிவிடும். இது கம்பு வேகமாக வெந்துவிட பயன்படும்.
- உடைத்த கம்பை மீதமுள்ள 1.5 கிண்ணம் தண்ணீரையும் சேர்த்து, உப்பு போட்டு குக்கரில் 4-5 விசில்கள் விட்டு எடுக்கவும். குக்கர் சூடு ஆறிய பின்னர் வெளியில் எடுக்கவும். அரிசி வேகவைப்பதைவிட சற்று அதிக நேரம் வேகவிட வேண்டும்.
பரிமாற பரிந்துரைப்பது
கம்பு சாதம் அல்லது கம்பு சோறு பரிமாற தயார். ஊறுகாய் அல்லது ஏதேனும் ஒரு குழம்புடன் பரிமாறலாம். அரிசிக்கு மாற்றாக இதை குழம்புடன் உண்ணலாம். எங்கள் வீட்டில் மீன் குழம்புடன் உண்பதை விரும்புவோம்.
குறிப்பு
- குக்கரில் சமைக்க விரும்பாதவர்கள் பானையில் சமைக்கலாம். ஆனால் கம்பு வேக அதிக நேரம் எடுக்கும்.