அரைத்த மாவை வெறும் வாணலியில் 3-5 நிமிடங்கள் மாவில் உள்ள ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும். இந்த புட்டு மாவை இறுக்கமாக மூடக்கூடிய பாத்திரத்தில் போட்டுவைத்துகொண்டால் 2 மாதங்கள் வரை உபயோகித்துகொள்ளலாம்.
செய்முறை
2 கிண்ணம் மாவை ஒரு தட்டில் போட்டு சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
கொட்டிய மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவு உதிரியாகவும், ஈர்ப்பதமாகவும் இருக்கும்படி கலந்து கொள்ளவும். மாவை கையில் எடுத்து பிடித்துவிட்டால் உதிரவேண்டும். இதுவே சரியான பதமாகும்.
நான் இன்று புட்டு செய்யும் குக்கரை பயன்படுத்துகிறேன். குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
புட்டு குழலில் முதலில் துருவிய தேங்காய் 1-2 மேசைக்கரண்டி போடவும். அடுத்து தயார் செய்த புட்டு மாவை நிரப்பவும்.
புட்டு குழலை மெதுவாக புட்டு குடம் அல்லது குக்கரின் மேலே பொருத்தவும்.
சில நிமிடங்களில் புட்டு குழலின் வழியாக ஆவி வெளியாகும். சிறிது நேரத்தில் புட்டு வெந்த வாசம்வரும்.
அடுப்பிலிருந்து எடுத்து தட்டில் கொட்டி பரிமாறவும்.