அரிசியை அவலுடன் சேர்த்து 5-6 மணி நேரம் ஊறவைக்கவும்.
நைசாக அரைத்துகொள்ளவும். தோசைமாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
வெதுவெதுப்பான சிறிதளவு தண்ணீரில் ஈஸ்டை போடவும்.
ஈஸ்ட் ஊறியபின்னர் மாவுடன் கலந்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். இந்த மாவை நீங்கள் ஆப்பம் செய்ய பயன்படுத்தலாம். குளிர்சாதன பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.
ஆப்பம் தயாரிக்க ½ மணிநேரத்திற்கு முன்னர் சர்க்கரை, உப்பு கலந்துகொள்ள வேண்டும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் லேசாக ஊற்றி துணி அல்லது பேப்பர் நாப்கினால் தேய்த்துவிட்டு கொள்ளவும்.
ஒரு கரண்டி மாவை ஊற்றி கடாயை கையில் எடுத்து சுற்றவும்.
மூடிவைத்து 1 நிமிடம் வேகவிடவும். நடுவில் வெந்துள்ளதா என்று பார்த்து பின்னர் எடுக்கவும்.