தேவையான அளவு மிளகாய் எடுத்து கொள்ளவும். குண்டு மிளகாய் ½ கிலோ காஷ்மீரி மிளகாய் 1/2 கிலோ தனித்தனியாக எடுத்து கொள்ளவும்.
ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் அல்லது காட்டன் துணியில் மிளகாயை பரப்பி 2 மணி நேரம் வெய்யிலில் காய வைக்கவும்.
2 மணி நேரத்துக்கு பிறகு மொறு மொறுப்பாகவும் உடையும் அளவும் காய்ந்து அரைக்க தயாராக இருக்கும்.
உங்களுக்கு முடிந்தால் மிளகாயின் காம்பை நீக்கலாம். நான் காம்புடன் அரைத்துக் கொள்வேன். நான் அருகில் உள்ள மில்லில் அரைத்துக் கொள்வேன். வெளி நாட்டில் இருப்பவர்கள் மிக்சியில் சிறிதளவு அரைத்துக் கொள்ளலாம். அரைக்கும் போது முகத்துக்கு மாஸ்க் அணிந்து கொண்டால் தும்மலை தவிர்க்கலாம்.
அரைத்த பின்னர் சூடாக இருக்கும். ஒரு பேப்பரில் பரப்பி ½ மணி நேரம் ஆற விடவும்.
சூடு நன்றாக ஆறிய பின்னர் ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம். சிறிய பெருங்காய துண்டு அல்லது உப்பை மிளகாய் தூளின் மேல் தூவி வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.