நல்ல தரமான கொத்தமல்லி விதைகள் வாங்கி அதில் கல் மற்றும் வேறு பொருட்கள் கலந்துள்ளதா என்று பார்த்து சுத்தம் செய்துகொள்ளவும்.
அடிகனமான ஒரு கடாயில் கொத்தமல்லி சேர்த்து அதனுடன் கருவேப்பிலை சேர்க்கவும்.
கைவிடாமல் 5 நிமிடங்கள் வறுக்கவும். கொத்தமல்லியும், கருவேப்பிலையும் நன்றாக வறுத்தபின்னர் மொறுமொறுப்பாகிவிடும். கையில் எடுத்து நசுக்கினால் உடையும். இதுவே சரியான பக்குவம்.
வறுத்த கொத்தமல்லியை அரைப்பதற்கு முன்னர் ஆறவிடவும். நான் அருகில் உள்ள அரவை மில்லில் கொடுத்து அரைத்துகொள்வேன். அரவை மில் இல்லாதவர்கள் மிக்ஸியில் சிறிது சிறிதாக பிரித்து அரைத்துகொள்ளவும்.
அரைத்தவுடன் ஒரு பேப்பரில் பரத்தி ஆறவிடவும். ஒரு மணிநேரம் கழித்து காற்றுபுகாத பாட்டிலில் போட்டுவைக்கவும்.