பூண்டை தோல் உரித்து, கழுவி, கிச்சன் டவலில் துடைத்து காயவைத்துகொள்ளவும்.
வெறும் வாணலியில் வெந்தயம் , கொத்தமல்லி விதை, சீரகம், கடுகு அனைத்தையும் தீயை குறைத்துவைத்து வறுத்துகொள்ளவும். ஆறவைத்து பொடித்துகொள்ளவும். இதுவே ஊறுகாய் மசாலா தூள். இந்த தூள் ஊறுகாயை கெடாமல் பாதுகாக்கவும், ஊறுகாய்க்கு உண்டான தனி சுவையையும் கொடுக்கும். நீங்கள் அதிக நாட்கள் வைத்திருக்க போவதில்லையெனில் இந்த தூளை சேர்க்க வேண்டியதில்லை.
பூண்டு பற்கள் 15, இஞ்சி துண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும்.
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் பூண்டு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். மிருதுவாக வேண்டும் அதே நேரம் கருகிவிக்கூடாது.
பூண்டை மட்டும் அரித்து எடுத்துவிடவும்.
அதே எண்ணெயில் கடுகு வெடிக்கவிடவும். பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
கொரகொரப்பாக அரைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிள்காய் சேர்க்கவும். குறைந்த தீயில் சிறிது நேரம் வதக்கவும்.
மஞ்சள் தூள், தயாரித்துவைத்த ஊறுகாய் மசாலா, வர மிளகாய் தூளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொள்ளவும். மசாலா பொருட்கள் கருகிவிடக்கூடாது.
எண்ணெய் மேலே பிரிந்து வரும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும்.
உப்பு, வினிகர் சேர்க்கவும். வினிகருக்கு பதிலாக கெட்டியாக கரைத்த புளிகரைசல் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். ஒரு கொதிவிடவும்.
பொரித்த பூண்டு சேர்த்து அனைத்தையும் 7-10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். எண்ணெய் மேலே பிரிந்து மசாலா பொருட்கள் அனைத்தும் பூண்டுடன் கலந்துவிடும்.
இந்த சுவையான பூண்டு ஊறுகாயை சுத்த்மான காற்று புகாத பாட்டிலில் ஆறிய பின்னர் எடுத்துவைக்கவும். சாதாரண வெப்பனிலையில் வைத்திருந்தாலே மாதகணக்கில் கெடாமல் இருக்கும். சுத்தமாக கையாள வேண்டும். ஈரக்கையில், ஈரக்கரண்டி உபயொகிக்க கூடாது. நீங்கள் குளிர்சாதன பெட்டியில் 1-2 வருடங்கள் வரையும் வைத்திருக்கலாம்.