சேமியாவை ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். நீங்கள் வறுத்த சேமியா கடைகளில் கிடைப்பதை வாங்கி கொண்டால் நேரமும் மிச்சமாகும்.
ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிடவும். அடுத்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரைவிடவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அளவு தண்ணீரை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்த பின்னர் வறுத்த சேமியாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். அடுப்பை குறைத்து வைத்து மூடிவைத்து 5 நிமிடங்கள் தண்ணீர் வற்றும்வரை வைக்கவும்.
அடுப்பை அனைத்து ஒரு ஸ்பூன் அல்லது ஃபோர்க்கால் மெதுவாக கிளறிவிடவும். தேங்காய் சட்னி அல்லது ஏதேனும் ஒரு வகை சட்னி அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.