அவல் தோசை
அவல் தோசை மாலை நேர டிபனுக்கு எளிதாக செய்யக்கூடியதாகும். இதற்கு அவல் மட்டும் இருந்தால் வீட்டிலுள்ள மற்றவற்றைக் கொண்டு சுலபமாக செய்துவிடலாம். பொதுவாக பிராமணர்கள் வீடுகளில் அவலை அதிகம் பயன்படுத்துவர். ஆனால் தற்போது அனைவரும் அதிகமான விதத்தில் வேறு வேறு விதமான டிபன் வகைகளை செய்ய வேண்டி இருப்பதால் அவலை அனைவரும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவல் உப்புமா, அவல் புளியோதரை இன்னும் பல வகைகளில் அவலைக்கொண்டு டிபன் வகைகள் செய்யலாம் . இதில் அவல் தோசை சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்.
அவல் தோசை செய்முறை
அவல் தோசை
Ingredients
- அவல் - 1 கிண்ணம்
- கிண்ணம் அரிசி மாவு - 1/4 கிண்ணம்
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- சீரகம் - 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
- சிறிய துண்டு இஞ்சி - 1 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி தழை - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
Instructions
- அவலை தண்ணீரில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- அரிசி மாவுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள பொருட்களை மாவுடன் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழையை சேர்க்கவும்
- சாதாரண தோசை ஊற்றுவது போல தோசையாக ஊற்றவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி தேய்த்துவிடக்கூடாது. சுற்றிலும் ஊற்ற வேண்டும். (ரவா தோசை ஊற்றுவது போல)
பரிமாற பரிந்துரைப்பது
- அவல் தோசையை காரச்சட்னியுடனும், வீட்டு முறையில் தயாரித்த இட்லி மிளகாய் பொடியுடனும் பரிமாறலாம்
வேறுபாடாக பரிந்துரைப்பது
- இதே முறையில் உடனடி ஓட்ஸ் தோசையும் செய்யலாம்.