திருவள்ளுவரின் ‘துப்பாக்கி’ பிரயோகம்
இப்படி இருக்கிறதா?
துப்பாக்கி என்ற தமிழ் வார்த்தைக்கு நமக்குத் தெரிந்த ஒரே பொருள் ‘GUN’ என்ற ஆங்கிலப் பதத்தின் தமிழாக்கம் என்பதே. தெய்வப் புலவர் ‘துப்பாக்கி’யைப் பயன்படுத்தும் அழகைப் பாருங்கள்:
திருக்குறளின் இரண்டாவது அதிகாரம் ‘வான் சிறப்பு’. மழையின் சிறப்பினைக் கூறும் அதிகாரம். அதின் இரண்டாவது பாடல் வருமாறு:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
உண்பவர்களுக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, தானும் ஒரு உணவாக இருப்பது மழையாகும். உயிர்களின் பசியையும் தாகத்தையும் தீர்ப்பது மழை என்பது பொருள்.
துப்பாக்கி = துப்பு + ஆக்கி
துப்பு = உணவு