ஆண்களின் ஒழுக்கமே அடிப்படை!!
இப்படி இருக்கிறதா?
ஆண்களின் ஒழுக்கமே அடிப்படை!!
புறநானூறு பண்டைத் தமிழரின் சமுதாய மற்றும் வீர வாழ்க்கையைக் கூறும் இலக்கியம்.
ஒளவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் இதோ
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
பொருள்
நாடாகட்டும்; காடாகட்டும்;
பள்ளமாகட்டும்; மேடாகட்டும்;
எங்கு ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ,
அதுவேதான் வாழ்வதற்குரிய நல்ல இடம்.
இதைப் பாடியவர் தமிழுலகம் போற்றும் பெண்பார்ப் புலவர் என்பது குறிப்பிடத் தக்கது.
பெண்ணுரிமை பேசும் இன்றைய சமூகம் இதை எப்படிப் பார்க்கிறதோ.