பிரக்கோலி துண்டுகள் – 1 கிண்ணம்(பொடியாக நறுக்கியது அல்லது துருவியது)
கேரட் – 1/ 2 கிண்ணம்(துருவியது)
பூண்டு – 4 பற்கள்
இஞ்சி – 1 அங்குல துண்டு
பச்சை மிளகாய் – 3- 4(பொடியாக நறுக்கியது)
பெருஞ்சீரகம்(சோம்பு) – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/ 8 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/ 8 தேக்கரண்டி
கருவேப்பிலை – 10(பொடியாக நறுக்கியது)
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
ஒரு பாத்திரத்தில் எல்லா பருப்புகளையும் கழுவி போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
அதே நேரத்தில் காய்கறிகளையும் நறுக்கி கொள்ளவும். நான் ஃபுட் பிராஸசர் கொண்டு பிரக்கோலி, கேரட்டை பொடியாக நறுக்க பயன்படுத்திகொள்வேன். நீங்கள் கத்தியால் பொடியாக நறுக்கிகொள்ளலாம்.
அரைத்த பருப்பை ஓரு பாத்திரத்தில் போடவும். பொடியாக நறுக்கிய காய்கள், பெருங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, பெருஞ்சீரகம் சேர்க்கவும். கையால் நன்கு கலந்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கவும்.
சிறிய அளவு மாவு எடுத்து இடது கையில் நடுவில் வைத்து வலது கையில் உள்ளங்கையால் அழுத்தி வடையாக தட்டி கொள்ளவும்.
தட்டிய வடைகளை எண்ணெயில் போட்டு பிரவுன் நிறமாக மாறும் வரை மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.