மில்க்க்ஷேக்
மில்க்க்ஷேக் என்பது குளிர்ச்சியான, இனிப்பான, புத்துணர்ச்சி கொடுக்கும் பானம். இது பால், ஐஸ் கிரீம், சுவையூட்டிகள் சேர்த்து செய்வதாகும். இதற்கு சுவை கொடுப்பது பழங்கள், அல்லது பழக்கூழ் அல்லது சாக்லேட் சாஸ் ஆகும்.
மில்க்ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக், திராட்சை மில்க்க்ஷேக், மாம்பழ மில்க்க்ஷேக், வாழைப்பழ மில்க்க்ஷேக், ஆப்பிள் மில்க்க்ஷேக், மாதுளம்பழ மில்க்க்ஷேக், புளூபெர்ரி மில்க்க்ஷேக், பீச் மில்க்க்ஷேக், அவகோடா மில்க்க்ஷேக் மற்றும் பல வகைகள் உள்ளன.
மில்க்க்ஷேக்
Ingredients
- பழத்துண்டுகள் (ஏதேனும் ஒரு பழம்) -1 கிண்ணம்
- ஆற வைத்த பால் – ¾ கிண்ணம்
- சர்க்கரை – 1 மேசைக்கரண்டி
- ஐஸ் கட்டிகள் – ¼ கிண்ணம் (அல்லது தேவைக்கேற்ப)
- வெண்ணிலா ஐஸ் கிரீம் – 2 மேசைக்கரண்டி
Instructions
- உங்களுக்கு தேவையான பழத்தை எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். விதைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
- பழத்துண்டுகளை மற்ற பொருட்களுடன் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
- உயரமான கண்ணாடி டம்ள்ரில் ஊற்றி மேலே கிரீம் கொண்டு அலங்கரித்து குளிர்ச்சியாக பரிமாறவும்.
குறிப்பு
- புதிய பழங்கள்/ பழக்கூழுக்கு பதில் , சுவையூட்டும் சாக்லேட் சிரப், வெண்ணிலா எஸென்ஸ், ஸ்ட்ராபெர்ரி சிரப், அல்லது ஏதேனும் ஒரு வகை பழ சிரப் உப்யோகிக்கலாம்.
- ஆற வைத்த பாலை பயன்படுத்த வேண்டும் புளிப்பு சுவை கொண்ட பழ வகைகள் பயன்படுத்தும்போது பால் திரிந்துவிடும்.