மைக்ரோவேவ் மைசூர் பாக்

மைக்ரோவேவ் மைசூர் பாக்

மைசூர்பாக் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இருந்து வந்ததாகும். இதை வீட்டில் உள்ள 3 பொருட்களைக்கொண்டு செய்துவிடலாம். அடுப்பில் வைத்து செய்வதற்கு நன்றாக செய்து பழகியவர்கள் மட்டுமே செய்யமுடியும். ஏனெனில் கிளறும்போது மாவு தெளிக்கும்.

மைக்ரோவேவ் மைசூர்பாக் செய்யும்முறையை எனது நெருங்கிய தோழி எனக்கு சொல்லிக்கொடுத்தது. எனது தோழி இனிப்பு வகைகள் செய்வதை மிகவும் விரும்புபவள். நீங்கள் எப்போது அவள் வீட்டிற்கு அழையாமல் சென்றாலும் உங்களுக்கு ஏதேனும் ஒருவகை இனிப்பு காத்திருக்கும். இனிப்புடன் ஒருவரை வரவேற்பது மகிழ்ச்சியான ஒன்றல்லவா.

மைக்ரோவேவ் மைசூர்பாக் அவசரத்திற்கும், எதிர்பாராத திடீர் விருந்தினர் வரும்போது உடனடியாக செய்வதற்கும் ஏற்றது. இதற்கு தேவையான பொருட்கள் தயாராக இருந்தால் 3 நிமிடத்தில் செய்துவிடலாம். பண்டிகை நாட்களில் சுலபமாக செய்யலாம். யாருக்கும் நீங்கள் 10 நிமிடத்திற்குள்ளாக இதை செய்திருப்பீர்கள் என்று கண்டுபிடிக்கமுடியாது. 10 நிமிடங்கள் என்பது தயாரிப்பு, மற்றும் சமைக்கும் நேரம் இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக ஆகக்கூடிய நேரம். தயாரிப்பு நேரம் 3 நிமிடங்கள் மட்டுமே. இப்போது செய்முறையை பார்ப்போம்.

மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்முறை

மைக்ரோவேவ் மைசூர் பாக்

Prep Time3 minutes
Cook Time3 minutes
Total Time6 minutes
Course: Dessert
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • கடலை மாவு - 1/2 கப (1 கப் = 235 மில்லிகிராம்)
  • பொடித்த சர்க்கரை - 1 கப்
  • நெய் - ½ கப்
  • பால்/ தண்ணீர் – 2 தேக்கரண்டி

Instructions

தயாரிப்பு முறை

  • ¾ கப் சர்க்கரையை பொடித்துக்கொள்ளவும்.
  • நெய்யை உருக்கி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு தட்டு அல்லது ஒரு ட்ரேயை நெய் தடவி மைசூர்பாக்கை கொட்ட தயாராக வைக்கவும்.

செய்முறை

  • மைக்ரோவேவ் கிண்ணம் அல்லது பீங்கான் கிண்ணத்தில் 1 மேசைக்கரண்டி நெய்யுடன் கடலை மாவை கலந்து மைக்ரோபவர் அதிகமாக வைத்து 1 நிமிடம் வைக்கவும். கடலை மாவு வறுத்த மனம் வரும். 
  • பாலையும் நெய்யையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். கட்டியில்லாமல் கிளறிவிடவும். ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  • மைக்ரோவேவில் அதிக வெப்பத்தில் 1 நிமிடம் வைக்கவும். இப்போது மாவு கெட்டியாகி நெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும்
  • கலவையை நன்றாக் கலந்து மீண்டும் மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும்.
  • மீண்டும் கலந்துவிட்டு 30 விநாடிகள் வைக்கவும். மாவு கலவை இப்போது நுரைத்து மிருதுவாகிவரும்.
  • மாவு கலவையை நெய் தடவி வைத்த தட்டில் கொட்டி 10 நிமிடங்கள் ஆறவிடவும். சுத்தமான கூரான கத்தியால் துண்டுகள் போடவும்.
  • மீண்டும் 5 நிமிடங்கள் ஆறிய பின்னர் சுவைத்து மகிழவும்.

மைக்ரோவேவ் மைசூர்பாக் செய்ய விரிவான வழிமுறைகள்

கடலை மாவை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய்யுடன் கலந்து அதிக வெப்பத்தில் 1 நிமிடம் வைக்கவும். கடலை மாவு வறுத்த மனம் வரும். அதிக நேரம் வைத்தால் கருகிவிடும்.

மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்முறை
பாலையும் நெய்யையும் சிறிது சிறிதாக கலந்து ஒரு ஸ்பூனால் நன்றாக கட்டியில்லாமல் கலந்துவிடவும். நன்றாக கலந்த பின்னர் சர்க்கரை சேர்த்து ½ மேசைக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
மைக்ரோவேவில் அதிக வெப்பத்தில் 1 நிமிடம் வைக்கவும். இப்போது மாவு கெட்டியாகி நெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.

மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்முறை
மீண்டும் நன்றாக கலந்து 1 நிமிடம் வைக்கவும். மறுபடியும் கலந்து 30 விநாடிகள் வைக்கவும். கலவை நுரைத்து மிருதுவாகிவரும்.

மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்முறை
இதுவே சரியான நேரம். இப்போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். அதிக நேரம் வைத்திருந்தால் கெட்டியாகிவிடும். நெய் மேலே மிதக்க ஆரம்பித்து பின்னர் உள்ளே மாவு இழுத்துக்கொள்ளும். நெய் மேலே பிரிந்து வரும்போது நெய்யை எடுக்கக்கூடாது எடுத்தால் மைசூர்பாக் கெட்டியாகிவிடும்.

மைக்ரோவேவ் மைசூர் பாக்
10 நிமிட்ங்கள் ஆறிய பின்னர் நெய் மாவுடன் கலந்து நல்ல பதத்திற்கு வரும். சுத்தமான கூரான கத்தியால் துண்டுகள் போடவும். மீண்டும் 5 நிமிடம் ஆற வைத்து துண்டுகளை எடுக்கவும். விரைவான சுலபமான இனிப்பை சுவைத்து மகிழுங்கள்

மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்முறை

குறிப்பு

எனது மைக்ரோவேவ் 900 வாட் கொண்டது. 2.5 நிமிடங்கள் போதுமானது. உங்களுடையது அதிக வெப்பநிலை கொண்டதாக இருந்தால் 2 நிமிடத்தில் கலவையை பார்த்துக்கொள்ளவும். உங்களுடையது குறைந்த வெப்பநிலை கொண்டதாக இருந்தால் 30 விநாடிகள் அதிகமாக வைக்கவும். நேரம் மைக்ரோவேவ் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும்.

மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்முறை



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.