ஒரு தட்டு அல்லது ஒரு ட்ரேயை நெய் தடவி மைசூர்பாக்கை கொட்ட தயாராக வைக்கவும்.
செய்முறை
மைக்ரோவேவ் கிண்ணம் அல்லது பீங்கான் கிண்ணத்தில் 1 மேசைக்கரண்டி நெய்யுடன் கடலை மாவை கலந்து மைக்ரோபவர் அதிகமாக வைத்து 1 நிமிடம் வைக்கவும். கடலை மாவு வறுத்த மனம் வரும்.
பாலையும் நெய்யையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். கட்டியில்லாமல் கிளறிவிடவும். ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
மைக்ரோவேவில் அதிக வெப்பத்தில் 1 நிமிடம் வைக்கவும். இப்போது மாவு கெட்டியாகி நெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும்
கலவையை நன்றாக் கலந்து மீண்டும் மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும்.
மீண்டும் கலந்துவிட்டு 30 விநாடிகள் வைக்கவும். மாவு கலவை இப்போது நுரைத்து மிருதுவாகிவரும்.
மாவு கலவையை நெய் தடவி வைத்த தட்டில் கொட்டி 10 நிமிடங்கள் ஆறவிடவும். சுத்தமான கூரான கத்தியால் துண்டுகள் போடவும்.
மீண்டும் 5 நிமிடங்கள் ஆறிய பின்னர் சுவைத்து மகிழவும்.