வெங்காயம் – 1 பெரியது அல்லது 2 சிறியது(நறுக்கியது)
தக்காளி - 2(பொடியாக நறுக்கியது அல்லது மசித்தது)
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/ 4 தேக்கரண்டி
Instructions
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
அதனுடன் குடமிளகாய், தக்காளி சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இதற்கு நீங்கள் பச்சை நிற குடமிளகாய் அல்லது மஞ்சள், சிகப்பு, பச்சை நிறம் அனைத்தும் கலந்தவற்றையும் பயன்படுத்தலாம்.
இதில் மசாலா பொடிகளை கலந்து கிளறவும். உங்களுக்கு காரம் அதிகமாக வேண்டுமானால் மிளகாய் தூள் சற்று அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.
மூடிவைத்து 10-12 நிமிடங்கள் வேகவிடவும். அடிக்கடி கிளறிவிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துகொள்ளலாம்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும். குட மிளகாய் மசாலா தயார்.