பணியாரம் செய்ய தனியாக மாவு அரைக்க தேவையில்லை என்றால் இட்லி அல்லது தோசை மாவை உபயோகித்து கொள்ளலாம்.
அரிசியை கழுவி உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற விடவும்.
நைஸாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
அரைத்த மாவை 10 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும் ) இரண்டு மடங்கு ஆகும் வரை புளிக்கவிடவும். இப்பொழுது பணியாரம் செய்ய மாவு தயார். அரைத்த மாவை குளிர் சாதன பெட்டியில் வைத்து எப்போது வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம்.
பணியாரம் தயாரிக்க
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு வெடிக்கவிடவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை வதக்கவும். விருப்பபட்டால் காய்கறிகள் சேர்க்கலாம். சேர்ப்பதாக இருந்தால் இதனுடன் சேர்த்து வதக்கி கொள்ளலாம்.
தாளித்த பொருட்களையும், துருவிய தேங்காயையும் மாவுடன் நன்றாக கலக்கவும்.
பணியாரக்கல்லை சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் ½ தேக்கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
ஒரு மேசைக்கரண்டி அளவு மாவை ஊற்றி 1 நிமிடம் விடவும்.
மரக்குச்சி அல்லது ஃபோர்க்கால் திருப்பிவிடவும். அடுத்த பக்கமும் வெந்துவிடும். உருண்டையான வடிவத்தில் இருக்கும். மூடிவைத்து வேக வைத்தால் விரைவாக வெந்துவிடும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்தபின்னர் பிரவுன் கலர் புள்ளிகள் இருக்கும். குறைந்ததீயில் செய்தால் நன்றாக இருக்கும். சுவையான குழி பணியாரம் பரிமாறத்தயார்.