பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள் - அலங்கரிக்க
Instructions
சென்னாவை கழுவி 5-6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். .
ஊற வைத்த தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் வேகவிடவும் (4 விசில்கள்). அதிகமாக வெந்துவிட்டால் குழைந்துவிடும். சிறிது உப்பு சேர்த்துக்கொண்டால் இதை தவிர்க்கலாம்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி அனைத்தையும் மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து சீரகம் வெடிக்கவிட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்க்கவும்.
அரைத்தவிழுதை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் தனியாகபிரியும் வரை வதக்கவும்.
வர மிளகாய் தூள், கொத்தம்ல்லி தூள், கசூரி மேத்தி, ஆம்சூர் பவுடர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
வேகவைத்த சென்னாவை தண்ணீருடன் சேர்த்து அடுப்பை குறைத்து மேலும் 7 நிமிடங்கள் வேகவிடவும்.
நறுக்கிய கொத்தமல்லி தழை, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும். சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.