கசூரி மேத்தி(காய வைத்த வெந்தயக் கீரை) -1 தேக்கரண்டி
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
ஆரஞ்சு கலர் பவுடர் - ¼ தேக்கரண்டி(விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
பிரஷ் கிரீம் - ¼ கிண்ணம்
வெங்காய தாள் - அலங்கரிக்க (பொடியாக நறுக்கியது)
Instructions
ஒரு கடாயில் வெண்ணெயை சூடாக்கி நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்
அதனுடன் தக்காளி சேர்க்கவும்.
முந்திரிப் பருப்பு சேர்த்து ½ கிண்ணம் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
மூடி வைத்து சிறிது நேரம் வேக விடவும்.
அடுப்பை அணைத்து ஆற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதுவே மக்கானி சாஸ் ஆகும். வடிகட்டியில் வடித்து வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் சிறிது வெண்ணெயை உருக்கி வர மிளகாய் தூள் சேர்த்து 10 நொடிகள் வதக்கவும். வெண்ணெயுடன் வர மிளகாய் தூளை நேரடியாக சேர்ப்பதால் நல்ல கலர் கிடைக்கும். வேறு கலர் தேவையில்லை.
மக்கானி சாஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து 5 நிமிடம் வேக விடவும்.
பிரஷ் கிரீம் ம்ற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
கையில் வெந்தயக்கீரையை வைத்து கசக்கி இதனுடன் சேர்க்கவும் மேலும் 5 நிமிடம் வேக விடவும்.
வெங்காயத் தாள் அல்லது பிரஷ் கிரீம் கொண்டு அலங்கரிக்கவும்.