Go Back
Print
Recipe Image
Instruction Images
Smaller
Normal
Larger
Print Recipe
சிகப்பு தேங்காய் சட்னி
Prep Time
5
minutes
mins
Cook Time
1
minute
min
Course:
condiments
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
செய்ய தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1 கப்
புதிதாக உடைத்து துருவியது
வர மிளகாய் - 5
தேவையான அளவு காரம்
பூண்டு - 2-3 பற்கள்
இஞ்சி - 1 அங்குலம் துண்டு
புளி - சின்ன துண்டு
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - அரைக்க தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் சுவை அதிகரிக்கும்
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
விரும்பினால்
சின்ன வெங்காயம் - 2
கருவேப்பிலை - 1 கீற்று
வரமிளகாய் - 1 உடைத்தது
பெருங்காயம் - 1 சிட்டிகை
Instructions
சட்னி செய்வதற்கு கீழ் உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரகாசமான சிவப்பு நிறத்தைப் பெற காஷ்மீர் சிவப்பு மிளகாயைப் பயன்படுத்தவும்.
மிதமான சூட்டில் இருக்கும் குடிநீரை ஊற்றி அரைக்கவும்.
அளவாக தண்ணீர் ஊற்றி அரைத்தால் சுவை அதிகமாகும்.வெள்ளை தேங்காய் சட்னி விட நான் தண்ணீர் குறைவாக இதற்கு சேர்ப்பேன்.
கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுத்தம் பருப்பு,பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
கருவேப்பிலை,வரமிளகாய்,பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.இதை அரைத்து வைத்த சட்னியில் மேல் சேர்க்கவும். ஒன்றாக கலந்து மகிழுங்கள்.