புட்டு மாவு - 2 கப்வீட்டில் தயாரித்தது அல்லது கடையில் வாங்கியது.
உப்பு - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/4 கப் + 3/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
Instructions
செய்முறை
வறுத்த புட்டு மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.அதில் உப்பு,1/4 கப் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
இந்த புட்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.பிசைந்த பின் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
மாவு சற்று உதிரியாக இருக்க வேண்டும்(உருண்டையாக பிடிக்கும் அளவு வேண்டாம்.)கையில் வைத்து பிடிக்கும் போது பிடியாக நிற்கும் அளவு இருந்தால் போதும்.
அதே நேரத்தில், புட்டு குடத்தின் அடிப்பாகத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.நான் புட்டு குட்டியை குக்கரில் வைப்பது வழக்கம். ஆதலால் குக்கரில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைப்பேன்.
புட்டு குட்டியின் மேல் பாகத்தில், அரை அங்குல அரைத்த தேங்காயை கீழே அடுக்காக சேர்க்கவும்(2 தேக்கரண்டி).
தயாரிக்கப்பட்ட புட்டு மாவின் இரண்டு கைப்பிடிகளை (4-5 தேக்கரண்டி) அடுத்த அடுக்காக வைக்கவும்.
நீங்கள் மேலே வரும் வரை மாற்றாக அரைத்த தேங்காய் மற்றும் புட்டு மாவுடன் அடுக்குவதைத் தொடரவும்.
இதே போல் அரைத்த தேங்காய், புட்டு மாவு மாறி மாறி சேர்த்து நிரப்பவும்.
படத்தில் காண்பித்தது போல் குக்கரில் மேல் கவனமாக புட்டு குட்டியை வைக்கவும். குக்கரின் வழியாக வரும் ஆவி துளைகளில் வழியாக புட்டு மாவை வேக வைக்கும்.புட்டு குட்டியின் வழியாக ஆவி வந்தால் புட்டு வெந்ததாக கொள்ளலாம்.ஒரு நிமிடம் விட்டு அடுப்பை நிறுத்தவும்.
புட்டு குட்டி வாங்கும் போது ஒரு குச்சி அதில் இருக்கும். வெந்த மாவை வெளியில் எடுக்க அது உதவும்.