முதலில் அரிசியை நன்றாக வேக விடவும், ஏனெனில் கேரளா அரிசி வேக அதிக நேரம் ஆகும்.இந்த அரிசியை குக்கரிலோ அல்லது பாரம்பரிய முறையில் வடிகட்டி சமைக்கலாம்.
அடுத்து அடுப்பில்,முழு முட்டையை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.இதற்கு பதில் ஆம்லேட் கூட செய்யலாம்.
அரிசியும்,முட்டையும் வேகும் சமயத்தில் அவியலுக்கு காய்களை நறுக்கவும்.அவியலை மண் பானையில் செய்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
இறுதியாக தேங்காயில் சம்மந்தியை செய்யவும்.
வீட்டில் மீன் இருந்தால் மீனை கூட வறுத்து வைக்கலாம். இப்பொழுது என்னிடம் மீன் இல்லை.
சாதம் வெந்த உடனே வாழை இலையில் அதை பொட்டலம் ஆக்க வேண்டும். சூடான சாத்ததில் செய்தால் தான் ருசி கிடைக்கும்.
வாழை இலையை தூசு இல்லாதவாறு நன்றாக கழுவவும்.
வாழை இலையை அடுப்பில் வைத்து மிதமான திறந்த சுட்டில் படத்தில் காண்பித்தது போல் சூடாக்கவும். அப்படி செய்தால் தான் இலையை மடிக்க சுலபமாக இருக்கும். இது இலைகளிருந்து கிருமிகளை சுத்தம் செய்ய உதவும்.
ஒரு மேஜையின் மீது அல்லது தட்டையான மேற்பரப்பின் மேல் செய்திதாளை வைத்து அதன் மேல் வாழை இலையை வைக்கவும்.
தேவையான அளவு அரிசியை அதில் நடுவே வைக்கவும். அதன் மேல் அவியல், சம்மந்தியை தாராளமாக வைக்கவும். பின் முட்டையை வைக்கவும். ஊறுகாய் பிரியர்கள் கொஞ்சம் ஊறுகாயை வைக்கலாம்.
இலையை படத்தில் காண்பித்தது போல் மடக்கவும்.வீடியோ பதிவிலும் பாருங்கள்.
இலை மடித்த உடன் அதை செய்தி தாள் வைத்து பொட்டலம் செய்யவும். பிரியாமல் இருக்க ரப்பர் பேண்ட், சணல் உபயோகப்படுத்தலாம். முன்பெல்லாம் வாழை நார் பொட்டலம் கட்ட உபயோகப்படுத்துவார்கள். உங்கள் மதிய சாப்பாடு தயார்.