கோபி பரோட்டா என்பது பரோட்டா வகைகளில் மிக பிரபலமானது. பஞ்சாபி சமையலில் இது மிக அதிகமாக பரிமாறபடுகிறது. காலிப்ளவரில் உள்ள முறுமுறுப்பு, மசாலா, பரோட்டாவின் அளவில்லா சுவை இவை யாவும் ஒன்றாக இணைவது தான் கோபி பரோட்டா.
Prep Time20 minutesmins
Cook Time30 minutesmins
Course: Main Course
Cuisine: Indian
Servings: 4people
Author: டாலியா டுவிங்கிள்
Ingredients
மாவு பிசைய
கோதுமை மாவு - 2 கப்ஆட்டா
உப்பு - ½ தேக்கரண்டி
தண்ணீர் - மிருதுவான மாவு பிசைய தேவையான அளவு
எண்ணெய் - பரோட்டா செய்ய
பரோட்டாவிற்குள் நிரப்ப
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - 4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
ஓமம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1/4 கப்பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிவிரும்பினால்
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உலர் மாங்காய் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
Instructions
மாவு பிசைய
மாவில் உப்பு சேர்க்கவும்.
தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து பிசையவும்.
மாவு மிருதுவாக சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
காலிஃப்ளவர் சமைக்கும் வரை, பிசைந்த மாவை ஒரு மெல்லிய துணியால் மூடி வைக்கவும். சிறிது நேரம் மாவு ஊறினால் பரோட்டா மிருதுவாக வரும்.
காலிஃப்ளவர் வறுவல் (நிரப்புவதற்கு)
காலிஃப்ளவரை மிக பொடியாக துருவிக் கொள்ள வேண்டும்.
வாணலில் எண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி, சீரகம், ஓமம் சேர்த்து தாளிக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
துருவிய காலிஃப்ளவர், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள்,மாங்காய் தூள் சேர்க்கவும்.
நன்றாக வதக்கி, மெல்லிய தனலில் அடுப்பை குறைத்து 2 நிமிடங்கள் விடவும். தண்ணீர் வற்றி மசாலா காலிஃப்ளவரில் இறங்க இந்த நேரம் போதுமானது ஆகும்.