பொதுவாக தேங்காய் வெளிப்புறம் முழுவதும் நாருடன் இருக்கும். நாரை கத்தியின் உதவியுடன் சிறிது சிறிதாக பிரித்து எடுக்க வேண்டும்.
தேங்காயின் மேல் பகுதியில் மூன்று கோடுகள் இருப்பதை காணலாம். அந்த கோட்டின் மேல் சுத்தியல் அல்லது பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வெட்டுகத்தியால் (பெரிய கனமான கத்தி) தட்ட வேண்டும். தேங்காயை திருப்பி அடுத்த கொட்டின் மேல் அடிக்க வேண்டும்.
ஓடு உடையும் வரை தேங்காயை திருப்பி திருப்பி அடிக்கவும். தேங்காய் இரண்டு பாதியாக உடைந்து விடும்.
சிலர் தேங்காயை பெரிய கல்லின் மேல் அடித்து உடைப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
மறக்காமல் தேங்காய் உடைக்கும் போது கீழே ஒரு கிண்ணம் வைத்து கொள்ளவும். தேங்காய் தண்ணீர் பிடிக்க தேவைப்படும். அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
சுலபமான முறையில் தேங்காய் துருவும் முறை. கத்தி அல்லது உணவு செயலி (ஃபுட் பிராசஸர்) பயன்படுத்தி
தேங்காயை உடைத்த பின்னர் நீங்கள் உள்ளே உள்ள பருப்பை சுலபமாக துருவி கொள்ளலாம். நான் அம்முறையை மேலே வீடியோ வழிமுறையில் காண்பித்துள்ளேன். செய்முறையை கீழே காண்போம்.
இந்த முறையில் தேங்காய் பருப்பை கூரான கத்தியால் எடுத்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும். மேலும் சுலபமாக செய்ய வேண்டுமானால் உடைத்த தேங்காயை 1-6 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் பிரீசரில் வைக்கவும்.இவ்வாறு வைப்பதால் ஓட்டிலிருந்து பருப்பை எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.
பிரீசரில் இருந்து எடுத்த பின்னர் ஒரு கத்தியால் பருப்பிற்கும் ,ஓட்டிற்கும் இடையில் கொடுத்து கீறி எடுக்கலாம். வி வடிவில் கீறினால் எடுக்க சுலபமாக இருக்கும்.
தேங்காயிலிருந்து பருப்பை எடுத்த பின்னர் மேலே உள்ள பிரவுன் நிற தோலை நீக்க வேண்டும்.இதை கத்தி அல்லது தோல் சீவும் பீலர் மூலம் எடுக்கலாம்.இது முக்கியமானது இல்லை. ஆனால் துருவல் வெண்மையாக இருக்க வேண்டுமானால் இவ்வாறு செய்வது நல்லது.
நறுக்கிய தேங்காயை மிக்ஸி அல்லது உணவு செயலி (ஃபுட் பிராசஸர் ) அல்லது பாக்ஸ் கிரேட்டர் உபயோகிக்கலாம்.
மிக்ஸியில் போட்டு நான்கைந்து முறை பல்ஸரில் திருப்பி எடுத்தால் துருவல் சரியான அளவில் கிடைக்கும். இது பொரியல் குழம்பிற்கு பயன்படுத்தலாம்.