ஒரு பாத்திரத்தில் வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், நறுக்கிய கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
எலிமிச்சை சாறு சேர்த்து மிருதுவான கலவையாக கலந்து கொள்ளவும்.
கலந்த கலவையை மீன் துண்டுகள் மீது தடவி 10-15 நிமிடங்கள் ஊற விடவும்.
குறைவாக எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கலாம். அல்லது அதிக எண்ணெய் ஊற்றியும் பொரிக்கலாம். (ஒரு பக்கம் வேக 2-3 நிமிடங்கள் ஆகும் .வெந்த பின்னர் அடுத்த பக்கம் திருப்பி பொட்டு வேகவிடவும்.)