அகலமான ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும். முழுவதும் தண்ணீர் சேர்ப்பதற்கு பதில் தண்ணீருடன் வெதுவெதுப்பான பால்/ அல்லது தயிர் சேர்த்து கொள்ளலாம்.
சிறிதளவு எண்ணெய் சேர்த்து மாவை மிருதுவாக பிசைந்து கொள்ளவும். இவ்வாறு செய்வது சப்பாத்தி மிருதுவாக இருக்க உதவும்.
ஈரமான துணியால் மூடி 15 நிமிடங்கள் வைக்கவும். இதுவும் முக்கியமான ஒன்றாகும்.
எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் கோதுமை மாவில் பிரட்டி படத்தில் காட்டியுள்ளபடி கட்டையால் வட்டமாக தேய்த்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியை போடவும்.
பிரவுன் நிற புள்ளிகள் தெரிந்தவுடன் (30 நொடிகளில் ) சப்பாத்தியை திருப்பி விடவும்.
சில துளிகள் எண்ணெய் மேலே ஊற்றவும். அடிபாகத்தில் பிரவுன் நிற புள்ளிகள் தெரிந்தவுடன் மீண்டும் சப்பாத்தியை திருப்பி விடவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
சப்பாத்தியின் ஓரங்களை பேப்பர் டவல் அல்லது ஒரு துணி அல்லது தோசை கரண்டி இதில் ஏதாவது ஒன்றால் அழுத்தி விடவும். இதனால் சப்பாத்தி நன்றாக உப்பி வரும்.
இரண்டு பக்கமும் பிரவுன் நிற புள்ளிகள் தெரிந்தவுடன் சப்பாத்தியை எடுத்துவிடவும். அதிக நேரம் வைத்தால் மிருதுவாக இருக்காது.
தயாரித்த சப்பாத்திகளை ஹாட் பாக்ஸில் பரிமாறும் வரை வைக்கவும். இதில் வைப்பதால் சப்பாத்தி மிருதுவாக இருக்க உதவும்.