பூண்டு பொடி – 1/4 தேக்கரண்டி(அல்லது 1 பூண்டு பல் நசுக்கியது)
பொடித்த சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
பொடித்த மிளகு தூள் – ¼ தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
முந்திரி பருப்பு 1-2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
Instructions
எளிதாக, விரைவாக தயாரிக்கும் முறை
உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவிகொள்ளவும். தோலை நீக்காமலும் உபயோகிக்கலாம்.
உருளைக்கிழங்கை ஒரே அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். சிறு துண்டுகளாக அல்லது நீள வாக்கில் அல்லது பெரிய துண்டுகளாக எப்படி வேண்டுமானாலும் வெட்டி கொள்ளலாம்.
நறுக்கிய உருளைகிழங்குடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக வேகும் வரை வறுத்து எடுக்கவும்.
விரிவான முறையில் காரமாக தயாரிக்கும் முறை
உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி கொள்ளவும். தோலை நீக்காமலும் பயன்படுத்தலாம்.
ஓரே அளவு துண்டுகளாக உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டிகொள்ளவும்.
மைக்ரோவேவ் அல்லது அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை பாதியளவு வேக வைத்து கொள்ளவும். இம்முறையை நீங்கள் செய்யாமலும் தவிர்க்கலாம். ஆனால் இதை செய்வதால் விரைவாக வறுவல் தயாரிக்கலாம்.
ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை போட்டு மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடிகள் சேர்த்து கலந்து கொள்ளவும். மேலேகுறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களில் ஏதேனும் ஒன்றிரண்டு பொடிகள் இல்லாவிடில் கவலைப்பட தேவையில்லை. ஏதேனும் சிக்கன் மசாலா, அல்லது மட்டன் மசாலா பொடிகள் இருந்தால் 2-3 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.)
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
வெங்காயம், முந்திரி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
மசாலா கலந்த உருளை கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் வைத்து வறுக்கவும்.
உருளைக்கிழங்கு நன்றாக வெந்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.