சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – 3 கொத்து(பொடியாக நறுக்கியது)
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
வர மிளகாய் – 1
பூண்டு பற்கள் – 5 அல்லது 6
கருவேப்பிலை – 6 இலைகள்
Instructions
குக்கரில் எலும்புடன் உள்ள சிக்கன் துண்டுகள், பச்சை மிளகாய், வெங்காயத்தில் பாதி அளவு சேர்த்து, 5-6 கிண்ணம் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
7-8 விசில் வரும்வரை வைக்கவும். நமக்கு எலும்புகளில் உள்ள சாறு முழுவதும் இறங்க வேண்டும்.
இந்த நேரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றிரண்டாக தட்டிகொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து தட்டிய மசாலா பொருட்களை சேர்த்து தக்காளி சேர்க்கவும். 1 அல்லது 2 நிமிடங்கள் வதக்கவும்.
குக்கர் ஆறிய பின்னர் மூடியை திறந்து எலும்புகள் சேர்ந்த சிக்கன் சாறை தாளித்ததில் ஊற்றவும். சிலர் துண்டுகள் இல்லாமல் சாறை மட்டும் சேர்ப்பார்கள்.