துவரம் பருப்பு - 3/4 கிண்ணம்(அல்லது பச்சை பயிர் அல்லது மசூர் தால் அல்லது எல்லா பருப்புகளும் சமமான அளவு.)
காய்கள்(ஏதேனும் ஒன்று அல்லது பல காய்கள் சேர்த்து) - 1 கிண்ணம் (விருப்பத்திற்கு ஏற்ப கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, முருங்கைக்காய், கீரை, மாங்காய், கேரட், சீமை சுரைக்காய், மஞ்சள் ஸ்குவாஷ், லிமா பீன்ஸ், பூசணி, கருணைக் கிழங்கு, வெண்டைக்காய், நூல்கோல்)
சின்ன வெங்காயம் - 8- 10(அல்லது 1 பெரிய வெங்காயம் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தக்காளி - 1
புளி கரைசல் - 1 1/2 மேசைக்கரண்டி
சாம்பார் தூள்(கடையில் வாங்கியது அல்லது வீட்டில் செய்தது) - 1 மேசைக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 5-7
வர மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலை - அழகுப்படுத்த
பெருங்காயம் - 4 சிட்டிகை
Instructions
துவரம் பருப்பு, தக்காளி, 2.5 கிண்ணம் தண்ணீர், 2 பூண்டு பற்கள் (விரும்பினால்) சேர்த்து வேகவிடவும். குக்கரில் வேகவிட்டால் 3 விசில் விடலாம் (அல்லது அடிபாகம் கனமான பாத்திரத்தில் வேகவிடலாம்).
வெந்த பருப்பை குழம்பு கரண்டியிலோ மத்திலோ நன்றாக மசித்து கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு, சீரகம், வெந்தயம், வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் காய்கள் சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும். மைக்ரோ வேவ் அவனில் காய்களை வேகவிடலாம். உங்கள் குக்கர் பெரியது என்றால் பருப்பு வேகும் போது மேல் அடுக்கில் காயை தண்ணீர் தெளித்தும் வேகவிடலாம்.