அரிசியுடன் 3 கிண்ணம் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக குழைவாக வேகவைக்கவும். (குறிப்பு: மீதமான சாதம் இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடுபடுத்தவும் )
சாதம் வெந்தவுடன் நன்றாக மசித்துகொள்ளவும்.
பாலை சேர்த்து பால் முழுவதும் சாதம் உறிஞ்சும் வரை கலக்கவும்.
ஆறிய பாலை சேர்ப்பதால் சாதமும் நன்றாக குளிர்ந்துவிடும். சாதம் சூடாக இருந்தால் ஆறியபின்னர் தயிர் சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதால் தயிர் புளிப்பாவதை தடுக்கலாம்.
கிரீம் மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும்.
தாளிக்க எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிடவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரைவிடவும்.
வர மிளகாய், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் விடவும். (நீங்கள் விரும்பினால் முந்திரி, திராட்சை சேர்க்கலாம்)
தாளித்தவற்றை சாதத்தில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்துவிடவும்.
தயிர் சாதம் பரிமாற தயார். துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காய், மாதுளை, திராட்சை, ஆப்பிள், அன்னாசி பழம் கொண்டு அலங்கரிக்கலாம்.