நறுக்கிய துண்டுகளை உப்பு கலந்த தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். தண்ணீரை வடிகட்டவும். இதை செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் காலிஃப்ளவரில் உள்ள புழுக்கள் நீக்கவும், உப்பு காலிஃபிளவர் துண்டுகளில் சேரவும் இது உதவும்.
மாவுகளை கலந்து அதில் உப்பு, மசாலா பொடிகள் சேர்த்து கலக்கவும். கலந்த மாவை காலிஃபிளவர் துண்டுகள் மேல் தூவி நன்றாக கலந்துவிடவும்.
காலிஃப்ளவரில் உள்ள ஈரப்பதம் போதுமானதாக இருக்கும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. தேவைப்பட்டால் சிறிதளவு தெளித்து கலந்துகொள்ளவும்.
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சூடாக்கவும். ஓரு கரண்டியில் காலிஃபிளவர் கலவையை எடுத்து எண்ணெயில் போடவும்.
பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். அதிகப்படியான எண்ணெயை பேப்பர் டவளில் போட்டு எண்ணெய் வடியவிடவும். ஏதேனும் ஒரு கெட்சப்புடன் பரிமாறவும்.