அரிசி – 1 கிண்ணம்(இட்லி அரிசி 1/2 கிண்ணம் / பச்சரிசி 1/2 கிண்ணம்)
துவரம் பருப்பு – 1/2 கிண்ணம்
கடலை பருப்பு - 1/2 கிண்ணம்
பாசி பருப்பு – 2 மேசைக்கரண்டி(விருப்பபட்டால்)
உளுத்தம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வர மிளகாய் - 4
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி – 1 அங்குல துண்டு
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – அடை சுடுவதற்கு தேவையான அளவு
விருப்பபட்டால் சேர்க்க தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை – ஒரு கையளவு(பொடியாக நறுக்கியது)
Instructions
அரிசி, பருப்புகளை இரண்டு முறை தண்ணீரில் கழுவி தேவையான அளவு தண்ணீர், வரமிளகாய் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்ததை சிறிதளவு தண்ணீர், இஞ்சி, பெருஞ்சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும். நீங்கள் விரும்பினால் நீர்க்க அரைத்துகொள்ளலாம். ஆனால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அடை மாவு கெட்டியாக இருக்கும். உங்களுக்கு விருப்பமானால் நறுக்கிய வெங்காயம் அல்லது நறுக்கிய கொத்தமல்லி தழை அல்லது துருவிய தேங்காய் சேர்க்கலாம். எதுவும் சேர்க்காமல் அடை தயாரிக்கலாம்.
இரும்பு தோசை கல் அல்லது நான்ஸ்டிக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவில் ஊற்றி வட்டமாக தேய்த்துவிடவும். பாரம்பரிய முறையில் தயாரிப்பது கெட்டியான மாவை கல்லில் வைத்து கையால் வட்டமாக தட்டுவார்கள்.
அடையின் நடுவிலும், சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
திருப்பிவிட்டு இரண்டு பக்கமும் வேகவிடவும். ஒரு பக்கம் வேக 2 நிமிடங்கள் ஆகும். அடையை இன்னும் சற்று நேரம் மூடாமல் கல்லில் வேகவிட்டால் மொறுமொறுப்பாக இருக்கும்.