Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
மீன் குழம்பு (வறுத்த தேங்காயுடன் செய்யப்பட்டது)
Course:
Side Dish
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
தேவையான பொருட்கள் – பகுதி – 1
தேங்காய்
துருவியது – 1/4 கிண்ணம்
சாம்பார் வெங்காயம் – 4-5
பூண்டு பற்கள் – 3
கருவேப்பிலை – 1 கொத்து
வர மிளகாய்
சீரகம் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் – பகுதி - 2
மீன் – 2
(துண்டுகளாக வெட்டியது)
தக்காளி – 1
(அரைத்தது)
புளிக்கரைசல் – 1/4 கிண்ணம்
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
வர மிளகாய் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 மேசைக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
கடுகு – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
விருப்பபட்டால் சேர்க்க
(நறுக்கிய முருங்கைகாய் துண்டுகள் அல்லது பச்சை மாங்காய் துண்டுகள் மீன் துண்டுகளுடன் சேர்க்க)
Instructions
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பகுதி -1 ல் குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுக்கவும்.
நல்ல வாசம் வரும்போது அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடவும். நன்றாக ஆறிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும்.
ஒரு அகலமான மண் பாத்திரத்தை (சட்டியை ) அடுப்பில் வைத்து எண்ணெய் சூடாக்கி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளிக்கவும்.
புளி கரைத்த தண்ணீர், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், தக்காளி,பெருங்காயம், அரைத்த மசாலா கலவை சேர்த்து கொதிக்கவிடவும்.
மீன் துண்டுகளை சேர்த்து குறைந்த தீயில் மூடி வைத்து வேகவிடவும். மீன் வெந்தபின்னர் நிறம் மாறி மிருதுவாகிவிடும்.
கொத்தமல்லி தழை சேர்த்து,கீறிய பச்சை மிளகாய் மேலே வைத்து சூடாக பரிமாறவும்.