கடலை பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, மிளகாய் தூள், கடலை பருப்பு, கருவேப்பிலை, உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தளர பிசையவும்.
சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து ஒரு துணியில் தட்டவும். (அல்லது ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி தட்டலாம். உடையாமல் தட்ட வரும் ).
ஃபோர்க்கால் குத்திவிடவும். மெதுவாக எடுத்து எண்ணெய் காயவைத்து அதில் போட்டு குறைந்த தீயில் நன்றாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
வெளியில் எடுத்து எண்ணெய் வடியவிடவும். காற்று புகாத பாத்திரத்தில் ஆற வைத்து எடுத்து வைக்கவும்.